Published : 13 Oct 2018 02:58 PM
Last Updated : 13 Oct 2018 02:58 PM

18 ஆண்டுகளுக்குப் பின் சாதனை: உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய மைல்கல்

இந்தியாவில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் சர்வதேச அணிக்கு எதிராக 18 ஆண்டுகளுக்கு பின் வேப்பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் இன்று பெற்றார்.

ஹைதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது இன்னிங்ஸ்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் சிறப்பாகப் பந்து வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 5 விக்கெட்டுகளை 2-வது முறையாக உமேஷ் யாதவ் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் நடந்த போட்டிகளில் சர்வதேச அணிகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த 1999-ம் ஆண்டுக்குப் பின் யாரும் எடுக்கவில்லை. கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மொஹாலியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் சிறீநாத் 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

 

இதற்குப்பின் அணியில் ஏராளமான வேகப் பந்துவீச்சாளர்கள் வந்துள்ளபோதிலும், ஒருவர் கூட 5 விக்கெட்டுகளுக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் எடுத்தது இல்லை. அந்தச் சாதனையை ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பின் இப்போது உமேஷ் யாதவ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு

 

விக்கெட்

 

எதிரணி

 

இடம்

 

சிறீநாத்

 

6/45

 

நியூசி.

 

மொஹாலி,1999

 

சிறீநாத்

 

5/60

 

ஜிம்பாப்வே

 

டெல்லி, 2000

 

எல்.பாலாஜி

 

5/76

 

பாகிஸ்தான்

 

மொஹிலி,2005

 

இசாந்த் சர்மா

 

5/118

 

பாகிஸ்தான்

 

பெங்களூரு,2007

 

ஜாகீர்கான்

 

5/91

 

ஆஸி.

 

பெங். 2008

 

சிறீசாந்த்

 

5/75

 

இலங்கை

 

கான்பூர், 2009

 

ஜாகீர்கான்

 

5/72

 

இலங்கை

 

மும்பை, 2009

 

ஜாகீர்கான்

 

5/94

 

ஆஸ்திரேலியா

 

மொஹாலி,2010

 

முகமது ஷமி

 

5/47

 

மே.இ.தீவுகள்

 

கொல்கத்தா,2003

 

புவனேஷ்

 

5/48

 

நியூசி.

 

கொல்கத்தா,2016

 

உமேஷ் யாதவ்

 

6/88

 

மே.இ.தீவுகள்

 

ஹைதராபாத், 2018

 

 

மேலும், 1999-ம் ஆண்டுக்குப் பின் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 9 முறை மட்டுமே ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதில் ஜாகீர்கான் 3முறையும், சீறிநாத் 2 முறையும், பாலாஜி, இசாந்த் சர்மா, சிறீசாந்த், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒருமுறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன் உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால், அது ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x