Published : 18 Oct 2018 01:32 PM
Last Updated : 18 Oct 2018 01:32 PM

மே.இ.தீவுகளுக்குப் பின்னடைவு: கெயிலைத் தொடர்ந்து மற்றொரு வீரரும் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் இருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், மற்றொரு அதிரடி தொடக்க வீரரான இவின் லூயிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இவின் லூயிஸ் விலகல் மேற்கிந்தியத்தீவுகள அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இவருக்குப் பதிலாக கெய்ரன் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளார், டி20 போட்டுத்தொடரில் நிகோலஸ் பூரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுடான ஒருநாள் தொடருக்கு ஏற்கெனவே அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ஆன்ட்ரூ ரஸல் இல்லாத நிலையில், இப்போது, லூயிஸ் இல்லாதது அணியின் பேட்டிங் வலிமையையும் மிகவும் குறைத்துவிடும்.

கிறிஸ் கெயில், இவன் லூயிஸ் இருவரும் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடிவருதால், இதில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும், இருவரும் இந்தியா, வங்கதேச பயணத்துக்கு தங்களால் வர இயலாது என்றும் தெரிவித்துவிட்டனர். அதேசமயம், காயம் காரணமாக ஒருநாள் போட்டியில் தன்னால்விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள ஆன்ட்ரூ ரஸல், டி20 போட்டியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவான் லூயிஸ் விலகியுள்ள நிலையில் ஒருநாள் அணிக்காக கெய்ரன் பாவெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பாவெல் ஒருநாள் போட்டியில் பெரிதாக இதுவரை விளையாடவில்லை. இதுவரை 38 இன்னிங்ஸ்களில் விளையாடி 901 ரன்கள் சேர்த்துள்ளார்.

டி20 போட்டிக்கு மட்டும் சேர்க்கப்பட்டு இருந்த ஓபெட் மெக்காய் இப்போது ஒருநாள் தொடருக்கும் சேர்க்கப்பட்டுள்ளார். மிகச்சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளாரன மெக்காய், கரீபியன் லீக் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

லூயிஸ் விலகலைத்த தொடர்ந்து டி20 அணியில் அவருக்குப் பதிலாக பூரண் சேர்க்கப்பட்டுள்ளார். கரீபியன் லீக்கில் பூரண் 10 இன்னிங்ஸில் 267 ரன்கள்சேர்த்து, ஸ்டிரைக்ரேட் 144.32 வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டி வரும் 21-ம் தேதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ரிஸ், தேவேந்திர பிஷூ,சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிம்ரன் ஹெட்மியர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோஸப், கெய்ரன் பாவெல், ஆஷ்லே நர்ஸ், காமோ பால், ரோவ்மென் பாவெல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஆஸ்ஹேனே தாமஸ், ஓபெட் மெக்கே.

டி20 அணி விவரம்:

கார்லோஸ் பிராத்வெய்ட்(கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மியர், நிகோலஸ் பூரன், ஓபெட் மெக்காய், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், காரே பியரே, கெய்ரன் பொலார்ட், ரோவ்மென் பாவெல், தினேஷ் ராம்தின், ஆன்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஆஸ்னே தாமஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x