Last Updated : 27 Oct, 2018 09:44 AM

 

Published : 27 Oct 2018 09:44 AM
Last Updated : 27 Oct 2018 09:44 AM

நியூசி. ஏ அணியுடன் 3 டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால், கருண் நாயர், விஜய் சங்கர் சேர்ப்பு

புனே

நியூசிலாந்து ஏ அணியுடன் நான்குநாள் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்ேகற்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெஸ்ட் தொடரில் இடம் பெறாத கருண் நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், மயங்க் அகர்வால், தமிழக வீரர் விஜய் சங்கர், சுப்மான் கில், இஷான் கிஷன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20 , மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான டி20 தொடர் மற்றும் நியூசிலாந்து ஏ  அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 தொடரில் முதல்முறையாக அணியில் இருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு, ரிஷப்பந்த், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் டெஸ்ட் தொடரிர் ரோஹித் சர்மா, பர்தீப் படேல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியத் தொடருக்காக நவம்பர் 16-ம் தேதி இந்திய அணி புறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் நடக்கிறது. அதற்கு முன்னதாக அந்நாட்டு ஏ அணியுடன இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

இதற்கிடையே, நியூசிலாந்து ஏ அணியுடன் 4நாள் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். 2-வது மற்றும் 3-வது போட்டிக்கு தனியாக வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது நியூசிலாந்து ஏ அணியுடன் முதலாவது 4 நாள் ஆட்டத்தில் விளையாடும் சில இந்திய வீரர்கள் அந்த போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலியத் தொடருக்கு புறப்பட்டு விடுவார்கள். அதன்பின் 2-வது,3-வது போட்டிக்கு தனியாக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத கருண் நாயர் நியூசிலாந்து ஏ அணியுடனான 2 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது 4 நாட்கள் போட்டிக்கு இந்திய ஏ அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் பிரித்வி ஷா, ரோஹித் சர்மா, முரளி விஜய், பர்தீவ் படேல், ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளதால், இந்த பயிற்சிப்போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார்கள்.

மீதமுள்ள 2 போட்டிகளில் சுப்மான் கில், விஜய் சங்கர், இஷான் கிஷான், ஷான்பாஸ் நதீம், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து ஏ அணியுடன் நடக்கும் நான்குநாட்கள் நடைபெறக்கூடிய 3 போட்டிகளும், மவுண்ட் மவுன்கானி, ஹேமில்டன், வாங்காரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

முதல் போட்டிக்கான இந்திய ஏ அணி(நியூசி.ஏ அணித் தொடர்)

முரளி விஜய், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, அஜின்கயே ரஹானே(கேப்டன்), பர்தீவ் படேல், கே.கவுதம், ஷான்பாஸ் நதீம், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ரஜ்னீஷ் குர்பானி, விஜய் சங்கர், கே.எஸ்.பரத்

2,மற்றும் 3-வது போட்டிக்கான இந்திய ஏ அணி விவரம் (நியூசி.ஏ அணித் தொடர்)

அபிமன்யு ஈஸ்வரன், மயங்க் அகர்வால், ஆர்.சம்ரத், கருண் நாயர்(கேப்டன்), அங்கித் பாவ்னே, சுப்மான் கில், விஜய் சங்கர், கே.எஸ்பரத்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், கே.கவுதம், ஷான்பாஸ் நதீம், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ரஜ்னிஷ் குர்பான.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x