Published : 27 Oct 2018 12:14 PM
Last Updated : 27 Oct 2018 12:14 PM

இத்துடன் தோனியின் டி20 வாழ்வு முடிந்துவிடவில்லை- எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம்: நெட்டிசன்கள் ஆவேசம்

மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளது பெரிய துணிச்சலான முடிவு என்பது ஒருபுறம் இருக்க, ஆச்சரியகரமான முடிவு என்பதையும் பலரும் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலங்களாக பந்துகளை தூக்கி அடித்து விறுவிறுவென ரன்களைக் குவிக்கும் திறனை தோனி இழந்து விட்டார், எத்தனை நாட்களுக்குத்தான் அவரிடம் பொறுமை காட்ட முடியும்? எத்தனையோ இளம் வீரர்கள் அவரது கனவு போலவே இந்திய நாட்டுக்காக ஆட வேண்டும் என்று காத்திருக்கின்றனர். மஞ்சள் சீருடையில் ஆடும் போது உள்ள ஆக்ரோஷமும் உணர்வும் அவருக்கு இந்திய அணிக்கு ஆடும்போது இல்லை போலவே அவரது ஆட்டம் நமக்கு உணர்த்துகிறது.

இந்நிலையில் டி20 போட்டிகளுக்கு மட்டும் அவரை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

“தோனி 6 டி20 போட்டிகளுக்கு இல்லை. நாங்கள் 2வது விக்கெட் கீப்பர் இடத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி20யில் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் தோனிபடை சும்மாயிருக்குமா, தங்கள் தல-க்கு 60 வயதானாலும் ஸ்ட்ரைக் ரேட் 40 ஆகக் குறைந்தாலும் ஆடியே ஆக வேண்டும் என்று ரசிக ஆவேச ஆதரவு மன நிலையில் இருப்பார்கள்.  டி20 சர்வதேச போட்டிகளில் தோனி 2 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தோனி ரசிகபடையின் சில கருத்துக்கள் இதோ:

ரவீணா அகர்வால்: தோனி இல்லையேல் இந்திய கிரிக்கெட் இல்லை, இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டியைப் பார்ப்பதில் ஆர்வமில்லை.

ஸ்ரீதர் மாஹி தம்போல்: ஒரு இந்தியனாக பிசிசிஐக்கு ஒரு பெரிய RIP

சுல்தான் லவ்:  ஷேம் ஆன் பிசிசிஐ, தோனி என்ற லெஜண்ட் நீக்கமா?

ஒருக் காலக்கட்டத்தை நிறுத்தப்பார்க்கிறது பிசிசிஐ என்று உதயா என்பவர் கருத்துப் போட்டுள்ளார்.

அபர்னா: பிசிசிஐ, உனது சுயநல முடிவுகளைப் பல பார்த்திருக்கிறோம், ஆனால் இது உச்சம், தினேஷ் கார்த்திக், பந்த் என்ன ஆடுகிறார்கள் என்று பார்ப்போம்.  இன்னொரு இலவச அறிவுரை, 2019 உலகக்கோப்பையிலிருந்தும் தோனியை நீக்கி விடுங்கள், முடிந்தால் லீக் ஸ்டேஜைக் கடந்து பாருங்கள்.

ஹர்ஷா போக்ளே: டி20 தொடரில் தோனி இல்லை என்பதே மிகப்பெரிய செய்தியாகப் போகிறது. 2020 வரை உலக டி20 இல்லை எனவே உலக டி20-யில் தோனிக்குப் பதில் வேறொருவர் ஸ்டம்புக்கு பின்னால் இருப்பார் என்றே தெரிகிறது.

ஆகாஷ் சோப்ரா: இனி டி20 கிரிக்கெட்டில் இந்திய உடையில் தோனியைப் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x