Published : 04 Oct 2018 04:58 PM
Last Updated : 04 Oct 2018 04:58 PM

பிரித்வி ஷா பேட்டிங் எந்த இந்திய ‘ஸ்டாரை’ நினைவூட்டுகிறது? : கார்ட்னி வால்ஷ் கருத்து

ராஜ்கோட்டில் தன் அறிமுக டெஸ்ட் சதம் மூலம் தீபங்களை ஏற்றிய பிரித்வி ஷாவுக்கு புகழாரங்கள் குவிந்து வருகின்றன. அவரது பேட்டிங் பலருக்கும் பல முன்னாள் வீரர்களை நினைவூட்டியிருக்கலாம்.

ஒரு சில ஷாட்க்ள் சேவாகை நினைவுபடுத்தின, ஒரு சில சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துமாறு அமைந்தன. சில கட் ஷாட்கள் ஜி.ஆர்.விஸ்வநாத்தை நினைவுபடுத்துவதாகவும் ஒரு சிலர் கருத இடமுண்டு.

பெரும்பாலும் அந்த குறைந்த உயரம், பேக் அண்ட் அக்ராஸ் உத்தி, கட், பஞ்ச் ஆடுவது இலங்கையின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் கலுவிதரனாவை நினைவூட்டுகிறது.

இந்நிலையில் மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் கூறியதாவது:

பிரித்வி ஷா அணுகுமுறை பயமற்ற அணுகுமுறையாக இருந்தது, ஷாட்களை ஆட அவர் அச்சப்படவில்லை, விரைவுகதியில் ஸ்கோர் செய்கிறார்.

அவர் ஆடுவது எனக்கு சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தையும் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தையும் நினைவூட்டுகிறது. மே.இ.தீவுகள் பந்து வீச்சில் அனுபவமில்லாததால் இந்திய வீரர்கள் வேகமாக ரன் குவிக்க முடிகிறது. பிரித்வி ஷா இந்திய அணியில் நீண்ட காலம் கோலோச்சுவார்.

இவ்வாறு கூறினார் கார்ட்னி வால்ஷ். அஜித் அகார்கர் கூறும்போது சேவாகுடன் ஒப்பிடுவதெல்லாம் மிகவும் சீக்கிரமான முடிவாகும், பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால் இனி வரும் ஆட்டங்களில் பிரித்வி ஷா கோலோச்சுவதாகவே அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x