Last Updated : 10 Oct, 2018 05:03 PM

 

Published : 10 Oct 2018 05:03 PM
Last Updated : 10 Oct 2018 05:03 PM

உலகின் நம்பர் 1 அணியை அதன் மண்ணில் சந்திப்பது சாதாரணமா? விமர்சகர்களுக்கு ஜேசன் ஹோல்டர் பதிலடி

மே.இ.தீவுகள் அணியின் தரம் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அந்த அணியின் காயமடைந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட் என்பதே பொறுமையைக் கடைபிடிப்பதற்கான ஓர் இடம். பார்ட்னர்ஷிப்புகளை கட்டமைத்து நெருக்கடியை நீண்ட நேரம் தக்க வைக்க வேண்டும். இதனை ராஜ்கோட்டில் நாங்கள் செய்ய முடியவில்லை, இந்திய அணி செய்தது.

உதவியில்லாத பிட்சில் பவுலர்கள் பேட்ஸ்மென்களைத் திணறடிக்க முடியவில்லை, ஆனால் சிக்கனமாக வீசி ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்தி ரன் எடுப்பதை கடினமாக்குவது முக்கியம், அதுகுறித்து பேசி வருகிறோம்.

அடுத்த டெஸ்ட்டில் ஆடுவது பற்றி நான் நாளை முடிவெடுப்பேன்.

நாங்கள் உலகின் சிறந்த டெஸ்ட் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து ஆடுகிறோம் என்பதை விமர்சகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 1994 முதல் டெஸ்ட் போட்டியில் இங்கு வெல்லவில்லை. எனவே இங்கு இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்பதையும் விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு அணியின் ஆட்டத்தை எப்படி மேம்படுத்துவது என்பதுதான் என் நோக்கம், விமர்சகர்களுக்கு பதில் அளிப்பதல்ல, நான் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.

நம்மால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். மக்கள் என்ன கூறினாலும் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்தான் சரியாக இருக்கும்.

கிறிஸ் கெய்ல் அணியில் இருப்பதை எப்பவும் விரும்புவேன். ஆனால் அவர் விளையாடவில்லை என்பது மற்ற வீரர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு, ஆனால் இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு கெய்ல் தயாராக இருக்கிறா, அவர் ஆடுவார்” என்றார் ஹோல்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x