Published : 29 Oct 2018 09:05 AM
Last Updated : 29 Oct 2018 09:05 AM

மும்பையில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி; கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே களமிறங்க வாய்ப்பு

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடைசி பந்தில் டை ஆனது. இதைத் தொடர்ந்து புனேவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சி கொடுத்தது.

1-1 என தொடர் சமநிலை வகிக்கும் நிலையில் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானத்தில் இன்று 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. புனே ஆட்டத்தில் இந்திய அணி 5 முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய போதிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங்கை முழுவது மாக கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கான அணிச் சேர்க்கையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வா கம் உள்ளது. கடந்த ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் பேட் செய்வதற்கு நேர்த்தியான வீரர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில் இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறங்கக்கூடும். இந்த வகையில் அணியை சம நிலைப்படுத்தும் வகையில் கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படக் கூடும் என கருதப்படுகிறது. அவர், களமிறங்கும் பட்சத்தில் கலீல் அகமது நீக்கப்படுவார். ஏனெ னில் தற்போதைய நிலையில் அணியில் 5-வது பந்து வீச்சாளரா கவும், பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் திறனை பெற்றவர் கேதார் ஜாதவ் மட்டுமே. ஏற்கெ னவே முதல் இரு ஆட்டங்களில் ஜடேஜாவுக்கு வாய்ய்பு வழங்கப் பட்ட நிலையில் அதனை அவர், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதனால் ஜடேஜாவுக்கு, இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவது சந்தேகம்தான்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாய வெற்றியை குறி வைத்து களமிறங்குகிறது. ஏனெ னில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். ஒரு வேளை வெற்றியை வசப்படுத்தத் தவறினால் கடைசி ஆட்டத்தில் நெருக்கடி அதிகரிக்கும். தொடரை வெல்வதற்கு மாறாக சமநிலையை ஏற்படுத்துவதற்கும், தொடரை இழக்காமல் இருப்பதற்கும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படக் கூடும். முதல் இரு ஆட்டங்களிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்ததால் இந்திய அணி தோல்விகளை சந்திக் கவில்லை. ஆனால் புனே ஆட்டத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள அம்பதி ராயுடுவும் சோபிக்கத் தவறினார்.

விராட் கோலி மட்டுமே போராடிய நிலையில் நடுகள வரிசையின் பங்களிப்பு என்பது இல்லாமலே போய்விட்டது. கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் தோனியும் சரி, அவருக்கு மாற்றாக கருதப்படும் ரிஷப் பந்தும் சரி பேட்டிங்கில் எந்த ஒரு வகையிலும் அணிக்கு உதவவில்லை. எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற சமயோசித புத்தி இல்லாமல் ரிஷப் பந்த் விரைவாக விக்கெட்டை பறிகொடுப்பது பல வீனமாக உள்ளது. அவர், தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் இன்றைய ஆட்டத்தில் அவரை வெளியே அமர வைப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலனை செய்யக் கூடும். இது நிகழ்ந்தால் மணீஷ் பாண்டே களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இன் றைய ஆட்டத்தையும் சேர்த்து 15 போட்டிகளை மட்டுமே எதிர் கொள்ள உள்ளது. இதனால் ஏற்கெ னவே டி 20 வடிவில் தனது இடத்தை இழந்துள்ள தோனி, இழந்த பேட்டிங் பார்மை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். மேலும் இந்திய அணியின் நடுகள வரிசையும் வலுப்பெற வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலை யில் இந்திய அணியின் நேர்மறை யான விஷயமாக உள்ளது விராட் கோலியின் அதீத பார்ம்தான். தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ள அவரிடம் இருந்து, இன்றும் பெரிய அளவி லான இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும்.

பந்து வீச்சில் சிறிது இடை வெளிக்கு அணிக்கு பிறகு திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதேவேளை யில் புவனேஷ்வர் குமார் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினார். எனினும் அவர், உயர்மட்ட செயல்திறனுக்கு தகுந்த படி விரைவாக தன்னை மீட்டெடுக் கும் தன்மை கொண்டவர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

புத்துயிர் பெற்றுள்ள மேற்கிந்தி யத் தீவுகள் அணி மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு சவால் கொடுக்கும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. டெஸ்ட் தொடரில் இருந்து அந்த அணி மாறுபட்ட வகையிலான திறனை வெளிப்படுத்தி வருகிறது. அணியில் அதிகள அளவிலான பவர் ஹிட்டர்கள் இருப்பது பலமாக உள்ளது. அதிலும் பின்கள வீரர்களும் மட்டையை சுழற்றும் விதம் அணிக்கு வெற்றியை தேடித் தருவது சிறப்பம்சமாக கருதப் படுகிறது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், சிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர் களுக்கு சவால் அளிக்கக்கூடியவர் களாக திகழ்கின்றனர்.

விசாகப்பட்டினத்தில் 123 ரன் களும், புனேவில் 95 ரன்களும் விளாசிய ஷாய் ஹோப்பிடம் இருந்தும், குவாஹாட்டியில் 105 ரன்களும், விசாகப்பட்டினத்தில் 94 ரன்களும் விளாசிய சிம்ரன் ஹெட்மையரிடம் இருந்தும் மீண்டும் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர் கள் இருவரும் தான் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கின் ஆணிவேராக உள்ளனர். இதனால் இவர்களை, விரைவாக ஆட்டமிழக்கச் செய்வ தில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்தக்கூடும். அனுபவ வீரரான மார்லோன் சாமுவேல்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாத நிலையில் புனே, ஆட்டத்தில் விரோட் கோலி விக்கெட்டை வீழ்த்தி பெரிய அளவில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

இதேபோல் ஜேசன் ஹோல்டரும் இரு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு துறைக்கு புதிய நம்பிக்கை கிடைத் துள்ளது. இதனை இன்றைய ஆட்டத்திலும் பிரதிபலிக்க செய்வ தில் அந்த அணி வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும். கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானத்தில் கடைசியாக 2006-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த மைதானத்தில் குறு கிய வடிவிலான ஆட்டம் நடை பெறுகிறது.

நேரம்: பிற்பகல் 1.30 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x