Published : 09 Oct 2018 12:14 PM
Last Updated : 09 Oct 2018 12:14 PM

யூத் ஒலிம்பிக் 2018 : பளு தூக்குதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் ஜெர்மி லலிரினுங்கா.

62 கிலோ எடைப் பிரிவில் 247 எடையை  வெற்றிகரமாக தூக்கி ஜெர்மி முதல் இடம் பிடித்திருக்கிறார்.  இதில் இரண்டாவது இடம் துருக்கியை டாப்டாஸுக்கு, மூன்றாவது இடம்  கொலம்பியாவைச் சேர்ந்த வில்லருக்கும் கிடைத்துள்ளது.

யூத் ஒலிம்பிக்கில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜெர்மி புரிந்திருக்கிறார்.

16 வயதான ஜெர்மி இதற்கு முன்னர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பளு தூக்குதலில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தங்கப்பதக்கம் வென்ற ஜெர்மிக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றது குறித்து ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.  வாழ்த்துகள் ஜெர்மி. யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x