Published : 23 Oct 2018 10:59 AM
Last Updated : 23 Oct 2018 10:59 AM

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் ரங்கனா ஹெராத்

இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் காலே நகரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஓய்வு பெற உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 14-ம் தேதி கண்டியிலும், 3-வது டெஸ்ட் போட்டி 23-ம் தேதி கொழும்பு நகரிலும் நடைபெறுகிறது.

இதற்கிடையே கடைசி டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திட்டமிட்டதற்கு முன்னதாகவே காலே நகரில் நடை பெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர், ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று முறைப்படி அறிவித்தது. 40 வயதான ஹெராத் 1999-ம் ஆண்டு காலே மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக மானார்.

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 430 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியில் முரளி தரனுக்கு (800 விக்கெட்கள்) பிறகு அதிக விக்கெட்கள் வேட்டை யாடியவர்களில் ஹெராத் 2-வது இடத்தில் உள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “ரங்கனா ஹெராத் முடிவை நாங்கள் மதிப்பதுடன் ஆதரிக்கவும் செய்கிறோம். அவரது ஓய்வு முடிவு இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு தான். இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர், செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம்” என தெரி விக்கப்பட்டுள்ளது. -ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x