Published : 23 Aug 2018 04:22 PM
Last Updated : 23 Aug 2018 04:22 PM

தன் பந்துவீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றிக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித்: ஆல்ரவுண்டராகவும் சோபித்தார்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் பார்பேடோஸ் ட்ரைடண்ட்ஸ் அணிக்கு ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது லெக்ஸ்பின் பந்து வீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றி அதில் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றி கண்டுள்ளார்.

லாடர்ஹில்லில் நேற்று நடைபெற்ற சிபிஎல் டி20 போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமை பார்பேடோஸ் டிரைடண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்த பொது ஸ்டீவ் ஸ்மித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுக்க, இவருடன் கூட்டணி அமைத்த ஷேய் ஹோப் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 43 ரன்களையும் எடுக்க பார்பேடோஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஜமைக்கா தல்லவாஸ் 9 ஓவர்களில் 80 ரன்கள் என்று அபாரமாக வெற்றியை நோக்கி உறுதியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் தனது மாற்றியமைத்த, ஷாகித் அஃப்ரீடி போன்ற ஆக்‌ஷனில் லெக் ஸ்பின் வீசி தொடக்க வீரர்களான ஜான்சன் சார்லஸ், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.

5 பந்துகள் இடைவெளியில் இருவரையும் ஸ்மித் வீழ்த்த திருப்பு முனை ஏற்பட்டது. ஷாகித் அஃப்ரீடி போல் தன் லெக்ஸ்பின் பந்து வீச்சு ஆக்‌ஷனை மாற்றியிருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித், இதனையடுத்து பந்து வீச்சில் பெரிய அளவுக்கு சோபிக்காத ஸ்மித் 3 ஓவர்களில் 19 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.

ஜமைக்கா தல்லவாஸ் அணி 20 ஓவர்கள் ஆடி 3 விக்கெட்டுகளையே இழந்தாலும் இலக்கை எட்ட முடியாமல் 154/3 என்று தோல்வி தழுவியது ஒரு வேளை உஷ் கண்டுக்காதீங்கவாக இருக்க வாய்ப்புண்டு.

இத்தனைக்கும் ராஸ் டெய்லர் 26 ரன்களிலும் அதிரடி இடது கை வீரர் டி.ஏ.மில்லர் 25 ரன்களுடனும்  நாட் அவுட்டாக இருக்கின்றனர், பின்னால் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் இருக்கிறார், போவெல் இருக்கிறார் ஆனால் அவர்களெல்லாம் இறங்க முடியாமலேயே ஜமைக்கா தோல்வி அடைந்தது.

ஸ்மித் தனது 18 பந்துகளில் 10 பந்துகளை டாட் பால்களாக வீசினார். 2 சிக்சர்களைக் கொடுத்தார்.

ஆல்ரவுண்ட் திறமைக்காக ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x