

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான டென்னிஸ் அணியில் இடம்பெற்றிருந்த சிநேகா தேவி ரெட்டி நீக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மாற்று வீராங்கனையாக இடம்பெற்றிருந்த ஸ்வேதா ரானா, சிநேகாவுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்துள்ளது.
மேலும் தங்களின் நடவடிக்கை சரியானது எனவும் ஏஐடிஏ தெரிவித்துள்ளது. சிநேகா தேவி ரெட்டி இப்போது மாற்று வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார். சிநேகா தரவரிசையில் 889-வது இடத்தில் உள்ளார். ஆனால் ஸ்வேதா 580-வது இடத்தில் உள்ளார். இது தொடர்பாக ஸ்வேதாவிடம் இருந்து கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஏஐடிஏ தெரிவித்துள்ளது.