Published : 29 Aug 2018 04:16 PM
Last Updated : 29 Aug 2018 04:16 PM

உண்மையான தரமுள்ள கிரிக்கெட்டின் இடத்தை வணிகமய கிரிக்கெட் ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா?: விராட் கோலி வேதனை

‘உண்மையான தரம் வாய்ந்த’ கிரிக்கெட்டின் இடத்தை 100 பந்து கிரிக்கெட் போன்ற வணிகமய கிரிக்கெட் தொடரக்ள் ஆக்ரமித்து வருவதை நினைத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேதனை அடைந்துள்ளார்.

“100 பந்து கிரிக்கெட் போட்டி அமைப்பாளர்களுக்கு வேண்டுமானால் இந்தப் புதிய வடிவம் உற்சாகமூட்டுவதாக இருக்கலாம். உள்ளபடியே கூற வேண்டுமினெல் இன்னொரு புதிய வடிவத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

நான் ஏற்கெனவே... வெறுப்படைந்துள்ளேன் என்று கூறவரவில்லை, ஏற்கெனவே ஏகப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் ரெகுலராக ஆட வேண்டியுள்ளது, எங்கோ வணிகமய கிரிக்கெட் உண்மையான தரமான கிரிக்கெட்டின் இடத்தை ஆக்ரமிக்கத் தொடங்கியுள்ளது, இது எனக்கு வேதனை அளிக்கிறது.

நேர்மையாகக் கூறினால் எந்த ஒரு புதிய வடிவத்துக்கும் ஒரு பரிசோதனை பேட்ஸ்மெனாக நான் இருக்க விரும்பவில்லை. 100 பந்து கிரிக்கெட் தொடரின் அங்கமாக எந்த விதத்திலும் நான் இருக்க விரும்பவில்லை. எனக்கு ஐபிஎல் விளையாடப் பிடிக்கும்., பிக்பாஷ் லீகை பார்க்கப் பிடிக்கும். இவற்றிலெல்லாம் நாம் ஏதோ ஒன்றை செய்து காட்ட வேண்டியுள்ளது, உயர்தர அணிகளுடன் சரி சமமாக சவாலுடன் விளையாட வேண்டியுள்ளது. உங்களது போட்டி ரசங்கள் சுரக்க நாம் இதில் ஆடுகிறோம். எனக்கு லீகுகள் பிடிக்கிறது, ஆனால் பரிசோதனை முயற்சிகள் தேவையில்லை, அது எனக்கு ஒத்துவராதது.

முதல் தர கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், நிச்சயம் புதிய வீரர்களுக்கு உத்வேகம் இருக்காது, அதாவது டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் ஆட அவர்களுக்கு ஊக்கமிருக்காது. குறிப்பாக டி20 கிரிக்கெட் பிரபலமடைவதை அடுத்து உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களுக்கு முதல் தர கிரிக்கெட்டை பேணி வளர்க்கும் பொறுப்பு உள்ளது. வசதிகளும் தரமும் உயரும்போது உத்வேகமும் குறையாது. வீரர்களை இந்த மனநிலைக்குத் தயார் செய்யவில்லையெனில் அவர்கள் இதிலிருந்து எளிதில் வெளியேறும் வழிகளை கண்டுபிடித்துக் கொள்வார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பெரிய அளவில் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரையும் இது சவாலாக மாற்றும். தொடர் முழுதும் உயர்வும் தாழ்வும் அணிகளுக்கு இருந்து கொண்டேயிருக்கும், சுவாரசியமாக இருக்கும். இதனை உண்மையில் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கிரிக்கெட் மந்த்லி இதழுக்குக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x