Published : 11 Aug 2014 10:00 AM
Last Updated : 11 Aug 2014 10:00 AM

விளையாட்டு செய்தித் துளிகள்

# நார்வேயின் டிராம்சோ நகரில் நடைபெற்று வரும் 41-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி 3-1 என்ற கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்திய மகளிர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியைத் தோற்கடித்தது.

# அமெரிக்காவின் இர்வின் நகரில் நடைபெற்ற அமெரிக்க நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் அந்நாட்டைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை கேத்தி லெடெக்கி 3 நிமிடம், 58.86 விநாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை படைத்தார்.

# ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (2), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை சந்திக்கிறார் வீனஸ். ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், பிரான்ஸின் சோங்காவும் மோதவுள்ளனர்.

# ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-6 (3), 3-6, 13-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சூ வெய்-சீனாவின் பெங் ஷுவாய் ஜோடியைத் தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x