Published : 30 Aug 2018 08:50 PM
Last Updated : 30 Aug 2018 08:50 PM

மாற்றமே மாறாதது: விராட் கோலி இப்படி ஒரு சாதனையா!

மாற்றமே மாறாதது என்பார்கள், ஆனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக எந்தவிதத்திலும் மாற்றமில்லாத அணியை இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பதவி ஏற்று 39 போட்டியை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், இதுவரை ஒரு போட்டியில் கூட அணியை மாற்றாமல் இருந்தது இல்லை.

இந்நிலையில், சவுத்தாம்டனில் டிர்ன்ட்பிரட்ஜில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணி வீரர்களே 4-வது போட்டிக்கும் எந்தவிதமான மாற்றமின்றி களமிறங்கியுள்ளனர்.

விராட் கோலியின் கேப்டனாகப் பொறுப்பேற்றதில் இருந்து 38 டெஸ்ட் போட்டிகளி்ல் ஒருமுறைகூட அணியை மாற்றாமல் இருந்தது இல்லை. அதாவது இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே மாதிரியான வீரர்களைக் களமிறக்கியதில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களில் சிலர் 2-வது போட்டியில் நிச்சயம் மாற்றப்பட்டு இருப்பார்கள். அந்தவகையில்தான் கடந்த 38 போட்டிகளிலும் விராட் கோலி செயல்பட்டார்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில்தான் முதல் முறையாக 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கிய அதே வீரர்களை எந்தவிதமான மாற்றமின்றி 4-வது போட்டிக்கும் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

தோனிக்கு பின் கடந்த 2014-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பு ஏற்ற கோலி, ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அணியில் குறைந்தபட்சம் ஒரு மாற்றமாவது செய்திருப்பார். ஆனால், இந்த முறை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருப்பது அனைவரையும் வியப்புக்கும், புதிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

இதுவரை கோலி தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளைச் சந்தித்து அதில் 22 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x