கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ்

கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார்.

ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன.

அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பயன்படுத்தியதோடு, சில வீரர்களின் அந்தரங்கத்தையும் கொச்சைப் படுத்தும் விதமாகப் பேசியது அப்போது சர்ச்சைக்குள்ளானது.

இது குறித்து டிவிலியர்ஸ் இப்போது கூறியுள்ளதாவது:

"ஆஸ்திரேலியா வீரர்கள் எதிரணியினரின் அந்தரங்கங்களைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். இதனை எங்கள் அணியின் சில வீரர்கள் முற்றிலும் விரும்புவதில்லை. ஆனால் இது ஆட்டத்தின் ஒரு பகுதிதான் என்றாலும் மைதானத்தில் முடிந்து விடுவதுதான் என்றாலும் அதற்குப் பிறகு களத்திற்கு வெளியே நாங்கள் நட்பு பாராட்ட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நாங்களும் ஆட்டத்தை ஆக்ரோஷமாக ஆடுபவர்கள்தான், ஸ்லெட்ஜிங் ஆட்டத்தின் ஒரு வடிவம்தான் அதிலும் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்” என்றார் டிவிலியர்ஸ்.

அந்த டெஸ்ட் தொடரில் நடந்த விஷயங்களுக்காக ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு கேட்டதாக டிவிலியர்ஸுக்கு தெரிவிக்கப்பட்ட போது, “அதுபற்றி எனக்குத் தெரியாது, மன்னிப்பு கேட்டிருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in