

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.
தோல்வியின் சோகத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில் பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியல் இடம்பெற்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
அந்த உணவுப் பட்டியலில் மாட்டுக் கறி இருந்ததுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. உணவுப் பட்டியலில் மாட்டுக் கறி இருப்பதைக் கண்ட நெட்டிசன்கள் சிலர் என்ன இந்திய வீரர்கள் மாட்டுக் கறி சாப்பிட்டார்களா? என அடுக்கான கேள்விகளை அந்தப் புகைப்படத்தின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்
இதற்கு எதிர்வினையாக, ஏன் இந்திய வீரர்கள் மாட்டுக் கறி சாப்பிடக் கூடாதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.