Published : 02 Aug 2018 10:48 AM
Last Updated : 02 Aug 2018 10:48 AM

‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக்

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி  285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட் சரிய முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் அஸ்வின் பந்து வீசும்போது,  கீப்பிங் செய்துக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையிலும் , இங்கிலாந்து வீர்ரகளில் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம், "டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ...போடுறா மாமா.. நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..”

ரொம்ப கிட்ட வேண்டாம், இவனுக்கெல்லாம் சாதரணமா பால் போடு, ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு அஷ்...”என்று கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x