

இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 27 வயதான பேட்ஸ்மேனான ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும் அணியில் இடம் பெற்றுள்ளார். பேட்டிங் செய்வதற்கான உடற் தகுதியை எட்டும் பட்சத்தில் ஜானி பேர்ஸ்டோ பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவார் என்றும் விக்கெட் கீப்பிங் பணியை ஜாஸ் பட்லர் மேற்கொள்வார் என்றும் இங்கிலாந்து தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.