Published : 05 Aug 2018 10:02 am

Updated : 05 Aug 2018 10:11 am

 

Published : 05 Aug 2018 10:02 AM
Last Updated : 05 Aug 2018 10:11 AM

உண்மையில் அவுட் ஸ்விங்கர்தான் முயன்றேன்: கோலியை வீழ்த்தியது குறித்து பென் ஸ்டோக்ஸ்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் போராளி விராட் கோலியை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றி வாசலைத் திறந்து விட்ட பென் ஸ்டோக்ஸ் கோலியை வீழ்த்தியது பற்றி உணர்ச்சிகரமாகக் கூறியுள்ளார்.

“முன்னிலை அவ்வளவாக இல்லை, கொஞ்சம் பின் தங்கியேயிருந்தோம். ஆனால் சாம் கரன் இந்திய அணியை விளையாட்டிலிருந்து அகற்றிவிட்டார், இந்த இளம் வயதில் அவர் ஆடிய ஆட்டம்... இந்த டெஸ்ட் போட்டியின் பெரிய திருப்பு முனை.


முதல் இன்னிங்சில் கோலி அபாரமான இன்னிங்ஸை ஆடினார், ஆனால் பந்துகள் ஸ்விங் ஆகும்போது அவர் அக்ராஸ் ஆட முயன்றார் அது இன்ஸ்விங்கர் ஆனால் நான் பந்தை பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்யவே முயன்றேன், அவர் கொஞ்சம் நீட்டி முழக்கி ஆடினார் பந்தைக் கோட்டை விட்டார்.

இங்கு என்ன எதிர்பார்ப்பது என்பது பற்றி எங்களுக்கு உத்தரவாதமாக எதுவும் தெரியவில்லை. 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், எங்களிடம் நிறைய நம்பிக்கை இருந்தது. இந்த டெஸ்ட் அபாரமான ஒரு டெஸ்ட். எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்தது, இப்போது இந்தியா போன்ற நம்பர் 1 அணியை வீழ்த்தி பேசிய வாய்களை அடைத்து விட்டோம்.

நெருக்கமான போட்டிகளில் வெல்லும் போது அணிக்கு ஏற்படும் நம்பிக்கையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, எனவே 5 டெஸ்ட் கொண்ட இந்தத் தொடரில் இந்த வெற்றி அளித்த தன்னம்பிக்கையை மேலும் எடுத்துச் செல்வோம்” இவ்வாறு கூறினார் பென் ஸ்டோக்ஸ்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x