ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா, கடந்த 2023 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் கடந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் ராகுல் திராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பயிற்சியாளர் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனை 9-ம் இடத்தில் ராஜஸ்தான் அணி நிறைவு செய்தது.

இதையடுத்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே வசம் டிரேட் செய்தது ராஜஸ்தான் அணி. அதேநேரத்தில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணி வாங்கி உள்ளது. வரும் சீசனை முன்னிட்டு அடுத்து மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து, அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in