

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார்.