

போபால்: இந்திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனுமான ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார்.
நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார்.
முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் பட்டிதாருக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு காயம் குணமாக சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் எஞ்சிய ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ரஜத் பட்டிதார் தயாராகி விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.