ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
Updated on
1 min read

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர்.

இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜூன் எரி​கைசி, உஸ்​பெகிஸ்​தானின் ஷம்​சிதீன் வோகிடோவுடன் மோதி​னார். இதில் அர்​ஜூன் எரி​கைசி 30-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா, பெல்​ஜி​யம் கிராண்ட் மாஸ்​ட​ரான டேனியல் தர்​தாவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் ஹரி​கிருஷ்ணா 25-வது நகர்த்​தலின் போது வெற்​றியை வசப்​படுத்​தி​னார். உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதிய ஆட்​டம் டிரா​வில்​ முடிவடைந்​தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in