

சென்னை: முழங்கால் காயம் காரணமாக பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வரும் டிசம்பர் 14-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்க இருந்தார். இதற்காக 39 வயதான அவர், சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள அஸ்வின், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையும் வகையில் பிக் பாஷ் லீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.