சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழ்நாடு அணி வெற்றி!

சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழ்நாடு அணி வெற்றி!
Updated on
1 min read

சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் சவுவிக் ஹால்டர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.

இந்த கோல்களை சவுவிக் ஹால்டர் 16-வது நிமிடம், 39-வது நிமிடங்களிலும், முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 3-வது நிமிடத்திலும் அடித்து அசத்தினார். தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 7-ம் தேதி புதுச்சேரியுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in