“அற்புதமான தருணம்” - இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

“அற்புதமான தருணம்” - இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!
Updated on
1 min read

சென்னை: தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், மகளிர் அணிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான தருணம். நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தங்களது தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தற்போது ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in