

கராச்சி: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தின்போது பாபர் அசம் 11 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.
தற்போது 4,234 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.