போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!
Updated on
1 min read

அன்​டால்யா: 16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன் இடம்​பெற்று விளை​யாடி​னார்.

கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மூத்த மகன் கிறிஸ்​டி​யானோ டாஸ் சான்டோ என்று அழைக்​கப்​படும் கிறிஸ்​டி​யானின்ஹோ கால்​பந்து பயிற்சி பெற்று உள்​ளூர் போட்​டிகளி​ல் பங்​கேற்று வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் துருக்​கி​யின் அன்​டால்யாவில் நடை​பெற்ற பெடரேஷன்ஸ் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் போர்ச்​சுகல் அணிக்​காக அறி​முக வீர​ராக அவர் களமிறங்​கி​னார். இதில் போர்ச்​சுகல் 2-0 என்ற கோல் கணக்​கில் துருக்​கியை வென்​றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in