

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு இந்தோனேசிய வீராங்கனை ஜானிஸ் யுஜென் முன்னேறியுள்ளார்.
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜானிஸ் யுஜெனும், ஸ்லோவாகியாவின் மியா போஹன்கோவாவும் மோதினர். இதில் ஜானிஸ் யுஜென் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மியாவை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதிச் சுற்றில் தைவானின் ஜோனா கேர்லாண்ட் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவாவை வென்று அரை இறுதிச் சுற்றில் கால் பதித்தார்.