

மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (29-ம் தேதி) கான்பெராவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆடம் ஸாம்பாவின் மனைவி ஹாரியத் 2-வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். இதன் காரணமாகவே ஆடம் ஸாம்பா, இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக தன்வீர் சங்கா ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயதான லெக் ஸ்பின்னரான தன்வீர் சங்கா, ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 7 டி20 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.