

விசாகப்பட்டினம்: உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது.
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 38.2 ஓவர்கலில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக ஜார்ஜி பிளிம்மர் 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் லின்சே ஸ்மித் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 29.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்து வெற்றி வாகை சூடியது. ஆமி ஜோன்ஸ் 86, டாமி பியூமான்ட் 40, ஹீதர் நைட் 33 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.