

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்வதற்கு இந்திய வீராங்கனைகளான மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சஹஜா யாமலபள்ளி, சுலோவேக்கியாவின் மியா போகன் கோவா, பிரான்ஸின் லூயிஸ் போய்சன் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதில், லூயிஸ் போய்சன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. 23 வயதான அவர், உலகத் தரவரிசையில் 377-வது இடத்தில் உள்ளார்.