

சென்னை: தேசிய சப்-ஜூனியர் ஆடவர் கால்பந்துப் போட்டிக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேனியில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025-26-ம் ஆண்டுக்கான தேசிய சப்-ஜூனியர் ஆடவர் கால்பந்துப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான பயிற்சி முகாம் தேனி மாவட்டம் போட்டிநாயக்கனூரில் உள்ள இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி முகாமுக்குத் தேர்வான தமிழக வீரர்கள் விவரம்: ஓமேஷ்வர், அங்குஷ் பிஸ்வாஸ், நிஷாந்த் ராய், அஸ்வின் கார்த்திக், முகமது ரைஹான், ரோஷன், கோகுல், கவின் ஜெய், தீர்த் கோத்தாரி, தஹீலம்பம் லான்சென்பா, நிரஞ்சன், முகமது அஸ்லான் லாண்ட்ஜ், கே.ரோஷன், புவன், கீர்த்தன் கெர்ராட், அபிட் நெகோ, ஜேக் ரொமாரியோ, ஜெரமையா, ரித்திக் செந்தில்குமார், குஞ்சாப்பு நிகில் தேஜ், சவுவிக் ஹால்டர், கேப்ரியோ எஸ்.யுப்பிலி, கனீஷ் ஆர்யா, பி.டுடே, கே.வினீத்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.