தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa
Updated on
1 min read

லாகூர்: ​பாகிஸ்​தான் - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 67 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்​தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்​களும், செனுரன் முத்​து​சாமி 6 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 84 ஓவர்​களில் 269 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் எடுத்து நோமன் அலி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

செனுரன் முத்​து​சாமி 11, பிரேனலன் சுப்​ராயன் 4, காகிசோ ரபாடா 0 ரன்​களில் வெளி​யேறினர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்​கெட்களை வீழ்த்​தினர். 109 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 46.1 ஓவர்​களில் 167 ரன்​களுக்கு சுருண்​டது.
அதி​கபட்​ச​மாக பாபர் அஸம் 42, அப்​துல்லா ஷபிக் 41, சவுத் ஷகீல் 38 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் செனுரன் முத்​து​சாமி 5, சைமன் ஹார்​மர் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து 277 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 22 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 51 ரன்​கள் எடுத்​தது. எய்​டன் மார்க்​ரம் 3, வியான் முல்​டர் 0 ரன்​களில் நோமன் அலி பந்​தில் வெளி​யேறினர். ரியான் ரிக்​கெல்​டன் 29, டோனி டி ஸோர்ஸி 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 226 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணி இன்று 4-வது நாள்​ ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது. லாகூர் மைதானத்தில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு 208 ரன்கள்தான். கடந்த 1961-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை படைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in