

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற கர்நாடக வீரர் விகாஸ் கௌடாவுக்கு ரூ.25 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற பிரகாஷ் நஞ்சப்பாவுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. விகாஸ் கௌடா, ஆடவர் வட்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். பிரகாஷ் நஞ்சப்பா, 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது தொடர்பாக கர்நாடக மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அபய சந்திர ஜெயின் கூறுகையில், “கௌடா, நஞ்சப்பா இருவரும் முதல்வர் சித்தராமையாவால் கௌரவிக்கப்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்” என்றார்.