ஆசிய கோப்பை கிரிக்கெட் | முதல் சுற்றோடு வெளியேறிய ஆப்கன்: ‘சூப்பர் 4’ சுற்றின் முழு விவரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் | முதல் சுற்றோடு வெளியேறிய ஆப்கன்: ‘சூப்பர் 4’ சுற்றின் முழு விவரம்
Updated on
1 min read

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ள ஆட்டங்களில் முழு அட்டவணை விவரம்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.

இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன.

‘சூப்பர் 4’ மோதல் அட்டவணை விவரம்:
>செப்.20 - இலங்கை vs வங்கதேசம் - துபாய்
>செப்.21 - இந்தியா vs பாகிஸ்தான் - துபாய்
>செப்.23 - பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி
>செப்.24 - இந்தியா vs வங்கதேசம் - துபாய்
>செப்.25 - பாகிஸ்தான் vs வங்கதேசம் - துபாய்
>செப்.26 - இந்தியா vs இலங்கை - துபாய்

இந்த ஆட்டம் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் 28-ம் தேதி அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in