ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி

ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடியை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இறுதிச் சுற்றில் லக்சயா சென்: நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரரான லக்சயா சென், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சவுடியென்-சென்னுடன் மோதினார்.

இதில் லக்சயா சென் 23-21, 22-20 என்ற கணக்கில் சீன தைபே வீரர் சவுடியென்னை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் லக்சயா சென், சீன வீரர் லி ஷிபெங்கை சந்திக்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in