Published : 31 Jul 2018 06:01 PM
Last Updated : 31 Jul 2018 06:01 PM

கோலி படை நியூசிலாந்து பயணம்: ஒருநாள், டி20 போட்டித் தொடரில் பங்கேற்பு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்கிறது. அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைத் தொடங்குகிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் ஆசியக்கோப்பை, அதன் பின் ஆஸ்திரேலியப் பயணம் செல்கிறது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு இந்திய அணி மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து பயணம் குறித்து அந்நாட்டு அணி போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்று அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

டி20 போட்டியின் 3 ஆட்டங்களும் வெலிங்டன், ஆக்லாந்து, ஹேமில்டன் நகரங்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும், நேப்பியர், மவுண்ட் மவுன்கானி, ஹேமில்டன், வெலிங்டன் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி ரூமி கூறுகையில்,” இந்தியா-நியூசிலாந்து மோதும், ஒருநாள் மற்றும் டி20 தொடர் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். இந்திய ஆடவர் அணி விளையாடும்போது, இந்திய மகளிர் அணியும் பயணம் மேற்கொண்டு இங்கு விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஒருநாள்போட்டித்தொடர்

முதல்போட்டி- நேப்பியர் – ஜன.23, 2019

2-வது போட்டி-மவுன்ட் மவுங்கானி - ஜன.26, 2019

3-வது போட்டி-மவுன்ட் மவுங்கானி – ஜன.28, 2019

4-வது போட்டி- ஹேமில்டன்- ஜன. 31, 2019

5-வது போட்டி- வெலிங்டன்- பிப். 3, 2019

டி20 போட்டித்தொடர்

முதல் டி20- வெலிங்டன்- பிப்.6, 2019

2-வது டி20- ஆக்லாந்து- பிப்.8, 2019

3-வது டி20- ஹேமில்டன்- பிப்.10, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x