கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி

கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி
Updated on
1 min read

பாரிஸ்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தனுடன் மோதினார். 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 14-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் உலக சாம்பியன்ஷிப்பில் 6-வது முறையாக பதக்கம் வெல்லும் சிந்துவின் கனவு நிறைவேறாமல் போனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in