மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: பெங்களூருவில் நடைபெற இருந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டங்கள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

தேவையான நிர்வாக மற்​றும் பாது​காப்பு அனு​ம​தி​களை பெறத் தவறிய​தால், சின்​ன​சாமி மைதானம் போட்​டிகளை நடத்த தகு​தி​யற்​ற​தாக கருதி இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்கு காரணம் கடந்த ஜூன் 4-ம் தேதி இங்கு நடை​பெற்ற ஆர்​சிபி கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தது​தான். இதனால் இங்கு நடை​பெற இருந்த உலகக் கோப்பை தொடரின் 5 ஆட்​டங்​கள் நவி மும்பை டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இந்த 5 ஆட்​டங்​களில் தொடக்க போட்​டி, அரை இறுதி ஆட்​டம், இறு​திப் போட்டி ஆகியவை அடங்​கும்.

நவி மும்​பை​யுடன் குவாஹாட்டி, இந்​தூர், விசாகப்​பட்​டினம் மற்​றும் இலங்​கை​யில் உள்ள கொழும்பு நகரிலும் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. இந்​தி​யா-​பாகிஸ்​தான் போட்டி கொழும்பு நகரில் நடை​பெறுகிறது.

ஏனெனில் இரு நாடு​கள் இடையே இருதரப்பு போட்​டிகள் நடை​பெறு​வ​தில்​லை. மேலும் பல்​வேறு அணி​கள் கலந்து கொள்​ளும் தொடரில் மோதும் ஆட்​டங்​களை பொது​வான இடத்​தில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in