பாபர் அசாம், ரிஸ்வானுக்கு மேலும் அடி: மைய ஒப்பந்தத்தில் கீழிறக்கம்!

பாபர் அசாம், ரிஸ்வானுக்கு மேலும் அடி: மைய ஒப்பந்தத்தில் கீழிறக்கம்!
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது, அதில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தங்களின் முந்தைய உயர் நிலையிலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான அணியிலிருந்து பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இவர்கள் நிலை ஏ-யிலிருந்து பி-நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது. இந்த முறை பிரிவு-ஏ என்ற வகையே இல்லாமல் செய்து விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பாபர் அசாம், ரிஸ்வான் இருவரும் கடந்த வருட வீரர்கள் ஒப்பந்தத்தில் ஏ-பிரிவில் இருந்த இரண்டு வீரர்களாக இருந்தனர். இப்போது இவர்கள் பி-பிரிவுக்கு இறக்கப்பட்டுள்ளனர்.

பி- பிரிவில் 10 வீரர்கள்: அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, முகமது ரிஸ்வான், சயிம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷாஹின் ஷா அஃப்ரீடி.

சி-பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 10 வீரர்கள்: அப்துல்லா ஷஃபீக், ஃபாஹீம் அஷ்ரஃப், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, நோமன் அலி, ஷகிப்சதா ஃபர்ஹான், சஜித் கான், சவுகத் ஷகீல்.

டி பிரிவு வீரர்கள்: அகமது டேனியால், ஹுசைன் தலத், குர்ரம் ஷஜாத், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ், முகமது அப்பாஸ் அப்ரீடி, முகமது வாசிம் ஜூனியர், சல்மான் மிர்ஸா, ஷான் மசூத், சுஃபியான் மொகிம்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 25 வீரர்களுக்கு ஒப்பந்தம் அளித்தது. இந்த முறை 25 என்பது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பி- பிரிவு வீரர்களுக்கு 4.55 மில்லியன் ரூபாய்களும் சி-பிரிவு வீரர்களுக்கு 2.03 மில்லியன் ரூபாய்களும் டி-பிரிவு வீரர்களுக்கு 1.26 மில்லியன் ரூபாய்களும் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in