அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்

Published on

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருதரப்பையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

ரவி காய் குடும்பம் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் பிராண்டான புரூக்ளின் க்ரீமரியின் குறிப்பிடத்தக்க உரிமையைக் கொண்டுள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ள சானியா சந்தோக், கால்நடை தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். மும்பையில் உள்ள பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in