Last Updated : 06 Jul, 2018 09:08 AM

 

Published : 06 Jul 2018 09:08 AM
Last Updated : 06 Jul 2018 09:08 AM

அரை இறுதிக் கனவில் பிரான்ஸ் கால்பந்து அணி: உருகுவேயுடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

லீக் ஆட்டங்களில் உருகுவே அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டு, 2-வது சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது உருகுவே. 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள உருகுவே அணியின் பலமே அதன் டிபன்ஸ் ஆட்டக்காரர்கள்தான். உருகுவேயின் டிபன்ஸ் கோட்டையைத் தகர்த்து கோலடிப்பது என்பது எதிரணிக்கு மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

கேப்டன் டியுகோ கோடின், ஜோஸ் கிமென்ஸ், மராட்டின் கக்காரெஸ், டியுகோ லக்சால்ட் ஆகியோர் பலம் வாய்ந்த டிபன்ஸ் ஆட்டக்காரர்களாக வலம் வருகின்றனர். இவர்களது இரும்புக் கோட்டையைத் தகர்ப்பது எதிரணிக்கு கடினமான விஷயமாக இருக்கும். அதேபோல அணியின் எடின்சன் கவானி, நாக்-அவுட் சுற்றில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தினார்.

அதே நேரத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரான கிளியான் மாப்பே அபாரமாக ஆடி எதிரணி வீரர்களை அச்சுறுத்தி வருகிறார். அவரது மிரட்டலான ஆட்டம் இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். உருகுவேயின் டிபன்ஸ் கோட்டையை அவரால் தகர்க்க முடியும் என்று பிரான்ஸ் அணி நம்புகிறது.

ஆட்டம் குறித்து பிரான்ஸ் அணியின் கேப்டன் ஹியூகோ லோரிஸ் கூறும்போது, “உருகுவே அணியை நாங்கள் திறம்பட எதிர்கொள்வோம். பிரான்ஸ் அணியை அரை இறுதிக்கு அழைத்துச் செல்ல அணி வீரர்கள் உறுதி பூண்டுள்ளனர்” என்றார். போட்டி குறித்து உருகுவே அணி பயிற்சியாளர் ஆஸ்கர் தபாரெஸ் கூறும்போது, “பிரான்ஸ் அணியை வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x