சென்னையில் ஆக.2-ல் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: எம்சிசி ஆல்டிஸ் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை சேப்பாக்கம் உள்ள எம்சிசி கிரிக்கெட் கிளப்பில் நாளை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த 185 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். ஆடவருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை என 8 பிரிவிலும், மகளிருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இத்தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எம்சிசி தலைவர் விவேக் குமார் ரெட்டி, எம்சிசி ஒருங்கிணைப்பு செயலாளர் பகவன்தாஸ் ராவ் ஆகியோர் தெரிவித்தனர். ஆல்டிஸ் நிறுவனத்தின் சித்தார்த் குப்தா உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in