எம்சிசி - முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல்

எம்சிசி - முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல்
Updated on
1 min read

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதியில் இந்தியன் ரயில்வே - ஐஓசி நேற்று மோதின. இதில் இந்தியன் ரயில்வே 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த அணி சார்பில் பங்கஜ் ராவத் 3 கோல்களையும், தர்ஷன் கவுகார் 2 கோல்களையும், ஷிவம் ஆனந்த், ஹர்தாஜ் அவுஜ்லா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

2-வது அரை இறுதியில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தியது. அஷிஷ் டோப்னோ, ரஜத் மின்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே இந்திய கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in