டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND

டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! - ENG vs IND
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ்.

இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடர்ந்து விளையாடியது. அப்போது களத்தில் பென் டக்கெட் - கிராவ்லி ஜோடி விளையாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சிராஜ் வீசிய பந்தை டக்கெட் அடிக்க முயல, அது பும்ராவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. 12 ரன்களில் டக்கெட் ஆட்டமிழந்ததை சிராஜ் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார்.

டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஓடி வந்த சிராஜ், டக்கெட்டின் முகத்துக்கு நேராக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். இதையடுத்து டக்கெட் களத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in