மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
Updated on
1 min read

செயின்ட் ஜார்ஜ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 286 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 253 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 277 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 34.3 ஓவர்​களில் 143 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 34, ஷமர் ஜோசப் 24, ஷாய் ஹோப் 17, பிரண்​டன் கிங் 14, அல்​சாரி ஜோசப் 13 ரன்​கள் எடுத்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​
பில் மிட்​செல் ஸ்டார்க், நேதன்
லயன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர்.

133 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்​பற்​றியது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 159 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி கிங்​ஸ்​டனில் பகலிர​வாக தொடங்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in