அதிவேக சதம் விளாசி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை! @ U-19 ODI

அதிவேக சதம் விளாசி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை! @ U-19 ODI
Updated on
1 min read

லண்டன்: 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சனிக்கிழமை இந்த சாதனையை அவர் படைத்தார்.

இந்தப் போட்டியில் 52 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதன் மூலம் 53 பந்துகளில் சதம் விளாசிய பாகிஸ்தானின் கம்ரான் குலாம் சாதனையை அவர் முறியடித்தார். இந்த ஆட்டத்தில் 78 பந்துகளில் 143 ரன்களை அவர் எடுத்தார். 13 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 183.33. இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 364 ரன்கள் இலக்கை விரட்டுகிறது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 48, 45 மற்றும் 86 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்துள்ளார். இதில் கடந்த போட்டியில் 20 பந்துகளில் அரை சதம் கடந்தார். கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த ஐபிஎல் 18-வது சீசனில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த சீசனில் விளையாடினார்.

கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டை போட்டியில் 56 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். இதன் மூலம் மொயின் அலி 2005-ல் படைத்த சாதனையை சமன் செய்தார்.

அதிவேக சதம் விளாசிய வீரர்கள் @ யு19 ஒருநாள் கிரிக்கெட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in