Published : 04 Jul 2025 07:50 AM
Last Updated : 04 Jul 2025 07:50 AM

3-வது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவச் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 154-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் 115-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் கசாக்ஸை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோவா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 46-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x