Published : 02 Jul 2025 06:00 AM
Last Updated : 02 Jul 2025 06:00 AM

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா, முசெட்டி தோல்வி

லண்டன்: ​விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முன்​னணி வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தனர்.

லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 3-வது முதலிடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, தரவரிசை​யில் 116-வது இடத்​தில் உள்ள இத்​தாலி​யின் எலிசபெட்டா கோசி​யாரெட்​டோவுடன் மோதி​னார். இதில் எலிசபெட்டா கோசி​யாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​தார்.

5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் குயின்​வென் ஹெங் 5-7, 6-4, 1-6 என்ற செட் கணக்​கில் 81-ம்நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் கேத்​ரினா சினியகோ​வா​விடம் வீழ்ந்​தார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், சகநாட்​டைச் சேர்ந்த 95-ம் நிலை வீர​ரான லூக்கா நார்​டியை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

11-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்​கில் 74-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் ராபர்டோ கார்​பல்ஸ் பனாவை வீழ்த்​தி​னார். 7-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரன்சோ முசெட்டி 2-6, 6-4, 5-7, 1-6 என்ற செட் கணக்​கில் 126-ம் நிலை வீர​ரான ஜார்​ஜி​யா​வின் நிகோலோஸ் பாசிலாஷ்​விலி​யிடம்​ தோல்​வி அடைந்​தார்​.

செய்தித் துளிகள்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 29-வது ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரில் யு-15 மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக் 4-2 என்ற கணக்கில் சீனாவின் ஷூ கீஹியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி வரும் 5-ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் கணுக்கால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக போலந்தின் சைப்ரியன் மிர்ஸிக்லோட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. 537 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கார்பின் போஷ் 5, கோடி யூசுப் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் ஜோஹர்பா என்ற பெயரில் உணவகம் திறந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x